தேடித் தேடிக் களைத்து எங்கோ மூலைத் தெருவொன்றில்ஊத்தை உடுப்போடுபாறையொன்றில் பசிக்களையோடுநிறையாத மனதோடு உட்கார்ந்திருப்பதாய் உணர்கிறேன்.
எல்லாம் நிறைந்திருந்தும் எதுவுமே இல்லாமல்அன்பின் வேஷங்கள் முன்னால்பசப்பாய் நடிக்கும் சாகச மனிதர்களுக்கு முன்னால்நானும்......என் நானும்.
அன்பு....அன்பின் தாக்கம் அறியவில்லை ஆரம்பத்தில்வயதின் வரம்பு கடக்கஅ...ன்பே ஏக்கமாகிவாழ்வு விழுந்து படுத்தபின்பும்அன்பின் துளிச் சிதறலுக்காய் ஏங்கும் ஒரு ஜீவனாய் நான்.காலவெளியில் கதறியழும்அன்புப் பசியால் தினம் வாடும் சின்னக்குழந்தையாய்துன்பப்புண் என் மனதில்.
தாயின் மடி தவழ்ந்து தந்தை தோள் கிடந்து ....அதன் பின் அன்பின் அருகாமைஇன்னும் கிடைக்காத பாவியாய்.
சுதந்திரமற்று வறண்ட தேசத்திலும்சீக்குப் பிடித்த மனித மனங்களிலும்அன்பின் ஒளி எங்கும் காணேன்.அன்பு வற்றி மானுடம் குன்றிக் கிடக்கிறது.
அன்பு கண்டேன்நிறைவாய் அன்பின் சாயல் கண்டேன்.சின்னக் குழந்தைகள் சொன்ன மொழிகளில்அன்பு வழியக் கண்டேன்.சிறகடிக்கும் பறவைகள் நிழல்தரும் மரங்கள்ஏன்..ஐந்தறிவு மிருகங்களில்கூட மிகுந்திருக்கும் அன்புமானிடம் மட்டும் மறந்ததேனோ !
சிலசமயங்களில் அன்பு என் பலவீனம் கண்டுபக்கம் வரும் பாசாங்கு காட்டும்மாய அன்பில் கட்டுப்பட்டுகாயப்பட்ட கதைகள் கனக்கவே உண்டு.
எங்கும் கதவடைப்பு தட்டுப்பாடு கிடைப்பது அரிது.கிடைக்கவே கிடைக்காது.ஒரு துளி அன்பிற்காய் ஓடிக் களைக்கிறேன்.அதுவும் உண்மை அன்பிற்காய் மட்டுமே.
நினைத்திராத நிமிடத்துளிக்குள் நான் இறந்துவிடுவேன்.என் சுவாசத்தின் இறுதி இழைத்துளியில் ஊசலாடிக்களைத்து இளைக்கிறேன்.என் உயிர் பிரிவதைக்கூட உணர்கிறேன்.சுவாசம் கொஞ்சம் வேகமானாலோஇரக்கத்தை விட்டுவிட்டாலோ என் உயிர் பறந்துவிடும்.
வாழ்வின் வரவுகளோடு என் வெகுமானங்களையும்விட்டுப் போகும் நேரத்திலும்ஒரு துளி உண்மை அன்பைஅன்பின் தீண்டலைத் தேடுகிறேன்.கிடைக்குமா ?!!!

No comments:
Post a Comment